×

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 86,025 மாணவர்களுக்கு பயிற்சி: கலெக்டர் தகவல்

 

செங்கல்பட்டு, மே 24: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 86 ஆயிரத்து 25 மாணவர்களுக்கு திறன் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டின் மாணவ, மாணவிகளின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்கின்ற வகையில், ‘நான் முதல்வன்’ என்ற முதலமைச்சரின் கனவுத் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.  அதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2022-2023 மற்றும் 2023-2024 கல்வி ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல், கலை மற்றும் அறிவியல், ஐடிஐ, டிப்ளமோ என மொத்தம் 86 ஆயிரத்து 25 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 86,025 மாணவர்களுக்கு பயிற்சி: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu district ,Collector ,Arunraj ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டம் பரனூர்...