×

உ.பி. வாரணாசி தொகுதியில் மோடி தோற்பார்: அகிலேஷ் கணிப்பு

பிரதாப்கர்: உத்தரபிரதேசத்தின் 80 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பிரதாப்கர் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் சமாஜ்வாடி வேட்பாளர் எஸ்.பி.படேலுக்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அகிலேஷ் யாதவ், “நாட்டில் தற்போதைய ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உள்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்ந்து வருகிறது. ஆளும் கட்சிக்கு எதிரான மக்களின் கோபமும் அதிகரித்துள்ளது. நடந்து முடிந்த 5 கட்ட தேர்தல்களில் அது எதிரொலித்தது. உத்தரபிரதேசத்தில் 7ம் கட்ட தேர்தலின்போது மக்களின் கோபம் உச்சத்தை எட்டும்.

140 கோடிக்கும் அதிகமான மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்க்கட்சிகளிடம் 400 தொகுதியை இழக்க செய்வார்கள். மீதமுள்ள 143 தொகுதிகளிலும் கூட பாஜவின் வெற்றி கடினமாக இருக்கும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியை தவிர அனைத்து தொகுதிகளையும் பாஜ இழக்கும் என முன்பு கூறினேன். இப்போது வாரணாசி தொகுதியிலும் பாஜ தோல்வியை தழுவும்” என்று கூறினார்.

The post உ.பி. வாரணாசி தொகுதியில் மோடி தோற்பார்: அகிலேஷ் கணிப்பு appeared first on Dinakaran.

Tags : UP ,Pratapgarh ,Uttar Pradesh ,Akhilesh Yadav ,Samajwadi ,SB Patel ,U.P. ,Modi ,Varanasi ,Akhilesh ,Dinakaran ,
× RELATED பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில்...