×

18 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கான திருத்திய தேர்வு பட்டியலை தயாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இறுதி முடிவுகளை வெளியிடக் கூடாது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற பிற விண்ணப்பதாரர்களின் நியமன வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பணியில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஆணையிட்டு, வழக்கின் விசாரணையை ஐகோர்ட் ஜூன் 10-க்கு ஒத்திவைத்தது.

The post 18 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : 18 District Education ,iCourt ,Government of Tamil Nadu ,Chennai ,Court ,Tamil Nadu Government Personnel Selection Board ,18 District Education Officer ,Dinakaran ,
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...