×

ஜூலை 4ல் பிரிட்டன் பொதுத்தேர்தல்: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு


லண்டன்: பிரிட்டனில் வரும் ஜூலை 4ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டிருக்கிறார். பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் கடந்த 2022ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025ம் ஆண்டு ஜனவரியில் நிறைவடைகிறது. இந்நிலையில் நேற்று அமைச்சரவை கூட்டம் கூடியது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு குறித்து எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி கூறுகையில், ‘தேர்தலை எப்போது நடத்தினாலும் நாங்கள் சந்திக்க தயாராக உள்ளோம்’ என்றார். தற்போது பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 14 ஆண்டுகால ஆட்சிக்கு பிறகு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியிடம் தோல்வியடையும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுவதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. இதனால் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

The post ஜூலை 4ல் பிரிட்டன் பொதுத்தேர்தல்: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : UK General Election ,Rishi Sunak ,London ,Conservative Party ,British General Election ,Dinakaran ,
× RELATED இத்தாலியில் ஜி 7 உச்சி மாநாடு போப்...