×

மருத்துவமனை வளாகத்தில் சோகம் பைக் மீது மரம் விழுந்து மனைவி கண்முன்னே கணவன் பலி

திருமலை : மருத்துவமனை வளாகத்தில் இருந்த மரம் வேரோடு பைக் மீது விழுந்ததில் கணவன் பலியானார். அவரது மனைவி படுகாயமடைந்தார்.தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள தும்குண்டா பகுதியை சேர்ந்தவர் ரவீந்தர்(52). இவரது மனைவி சரளாதேவி (44). ரவீந்தருக்கு உடல்நலம் பாதிப்பு இருந்து வந்ததால் அவ்வப்போது பொல்லாரம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்தார். இதேபோல் நேற்றுமுன்தினம் மனைவியுடன் பைக்கில் மருத்துவமனைக்கு சென்றார்.

மருத்துவமனை வளாகத்திற்குள் வந்தபோது அங்கிருந்த மரம் ஒன்று வேரோடு பைக் மீது சாய்ந்தது. இதில் தம்பதி இருவரும் இடிபாடுகளில் சிக்கினர். இதைக்கண்ட மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்து தம்பதியை மீட்க முயன்றனர். ஆனால் மரக்கிளை ராட்ச அளவில் இருந்ததால் அதனை உடனடியாக அகற்றி தம்பதியை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேரம் போராடி தம்பதியை மீட்டனர். ஆனால் அதற்குள் ரவீந்தர் இறந்தது தெரியவந்தது. சரளாதேவி படுகாயமடைந்தார். அவரை அதே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த பொல்லாரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மருத்துவமனை வளாகத்தில் சோகம் பைக் மீது மரம் விழுந்து மனைவி கண்முன்னே கணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Ravinder ,Tumkunda ,Hyderabad, Telangana ,Saraladevi ,
× RELATED மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற...