×

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரிசி கடத்தலில் ஈடுபட்டு அனாதையாக கிடக்கும் 34 வாகனங்கள்

தஞ்சாவூர், மே23:தஞ்சாவூர் மாவட்டத்தில் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 34 வாகனங்கள் உரிமை கோராமல் அனாதையாக கிடக்கின்றது. தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், ஓரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பண்டங்களை லாப நோக்கத்தில் கடத்தி விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அதன்படி 27 இருசக்கர வாகனங்கள் 7 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 34 வாகனங்கள் கைப்பற்றுகை செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து நிலுவையில் இருந்து வருகிறது.

எனவே வாகனங்களை உரிமை கோரி உரிய ஆவணங்களுடன் எவரும் முன்வராத காரணத்தினால் அரசுக்கு ஆதாயம் செய்து மின்னணு வாயிலாக ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இந்த வாகனங்கள் தங்களுடையது எனக் கருதினால் சம்மந்தப்பட்டவர்கள் வாகனம் உரிமை தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களுடன் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 தினங்களுக்குள் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் வாகனத்தினை உரிமை கோரும்படி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் அரிசி கடத்தலில் ஈடுபட்டு அனாதையாக கிடக்கும் 34 வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Thanjavur ,Revenue Officer ,Thiagarajan ,District ,Tiruvaiyaru ,Boothalur ,Kumbakonam ,Papanasam ,Thiruvidaimarudur ,Orathanadu ,Pattukottai ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்புவதாக...