×

கம்பம் உழவர் சந்தையில் மல்லித்தழை கிலோ ரூ.150க்கு விற்பனை

கம்பம், ஜூன் 16: கம்பம் உழவர் சந்தையில் மல்லித்தழை விலை திடீரென உயரத்தொடங்கி உள்ளது. விளைச்சல் குறைவாலும், வரத்து இல்லாததாலும் கிலோ ரூ.140க்கு மேல் விற்பனை ஆகிறது. கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தோட்டங்களில் மல்லித்தழை பயிரிடப்பட்டு வருகிறது. நன்றாக விளைந்த மல்லித்தழையை விவசாயிகள் அறுவடை செய்து கம்பம் உழவர் சந்தை மற்றும் பல்வேறு ஊர்களில் சந்தை மற்றும் காய்கறிகடைகளில் மொத்தம் மற்றும் சில்லறையாக விற்பனை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை மல்லித்தழை கிலோ 40 க்கு சில்லறையில் விற்பனை செய்யப்பட்டது.

இது படிப்படியாக உயர்ந்து நேற்று கம்பம் உழவர் சந்தையில் கிலோ ரூ.140க்கு விற்கப்பட்டது. வெளி மார்கெட்டில் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், கடந்த மாதம் தொடர்ச்சியாக பெய்த மழையால் மல்லித்தழை பயிரிட்டது. விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து இல்லை. வரத்து இல்லாததால் இந்த விலை உயர்வு. அடுத்த ஓரிரு வாரங்களில் மல்லித்தழை வரத்து அதிகரித்த உடன் இவ்விலை குறையும் என்றனர்.

The post கம்பம் உழவர் சந்தையில் மல்லித்தழை கிலோ ரூ.150க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Gampam ,market ,Kambam ,Gampam Farmers Market ,Dinakaran ,
× RELATED இடத்தை காலி செய்த யானைக் கூட்டம் சுருளியில் குளிக்க அனுமதி