×

வில்லிபுத்தூரில் நம்மாழ்வார் ஜெயந்தி விழா

வில்லிபுத்தூர், மே 23: வில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சன்னதி வளாகத்தில் உள்ள நம்மாழ்வார் சன்னதியில் அவருடைய ஜெயந்தி பிறந்த தினமான நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயந்தி விழாவை முன்னிட்டு நம்மாழ்வார் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார். சிறப்பு பூஜையிலும் தீர்த்தவாரி நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி லட்சுமணன் தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

The post வில்லிபுத்தூரில் நம்மாழ்வார் ஜெயந்தி விழா appeared first on Dinakaran.

Tags : Nammalwar Jayanti Festival ,Williputhur ,Nammalwar shrine ,Periya Perumal shrine ,Tirumukkulam ,Andal Temple… ,Nammazhwar Jayanti Festival ,
× RELATED வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்