×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரவலாக பெய்த கோடைமழை

நாகப்பட்டினம், மே 23: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மதியம் வரை லேசான மழை பெய்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கோடை வெயில் கொடுமை அதிகமாக இருந்தது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி மாவட்டம் முழுவதும் கன மழை பெய்தது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் ஓரளவு குறைந்தது. இதன் பின்னர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இருப்பினும் கோடை வெயில் தாக்கத்தை குறைக்கும் அளவிற்கு மழை பெய்யவில்லை என பொதுமக்கள் கருதினர். தற்பொழுது பெய்யும் கோடை மழை சாகுபடிக்கு உகந்தது இல்லை. புழுதி உழவு அடிக்க மட்டுமே இந்த மழை பயன்தரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று (22ம் தேதி) அதிகாலை 4 மணி முதல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, வலிவலம், திருக்குவளை, வேதாரண்யம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் லேசான மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மதியம் 2 மணி வரை நீடித்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் கோடை வெயில் தாக்கம் குறைந்துள்ளது. ஆனால் கனமழை பெய்தால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரவலாக பெய்த கோடைமழை appeared first on Dinakaran.

Tags : Nagapattinam district ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15,491 தேர்வாளர்கள் குரூப்-4 தேர்வு எழுதினர்