×

காளான் வளர்ப்பு குறித்து கம்பம் பகுதி விவசாயிகளுக்கு விளக்கம்

கம்பம், மே 23: கம்பம் பகுதி விவசாயிகளுக்கு காளான் வளர்க்கும் முறையையும், அதன் பயன்களையும் மதுரை வேளாண் கல்லூரி மாணவி ரோஸ்லின் ஜாஸ்மின் எடுத்துரைத்தார். ஊரக வேளாண்மை பணி அனுபவத்திட்டத்தின் கீழ் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் கம்பம் பள்ளத்தாக்கில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றார்கள். அதன் ஒரு பகுதியாக வேளாண்மை சம்பந்தமாக விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு தகவல்களை அளித்து வருகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அதிகளவில் காளான் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபடுவதால் ,காமயகவுண்டன்பட்டியில் உள்ள விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு குறித்து விரிவாக மதுரை வேளாண் கல்லூரி மாணவி ரோஸ்லின் ஜாஸ்மின் எடுத்துரைத்தார். மேலும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.

The post காளான் வளர்ப்பு குறித்து கம்பம் பகுதி விவசாயிகளுக்கு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Kambam ,Gampam ,Roslyn Jasmin ,Madurai Agricultural College ,Kampam Valley ,
× RELATED கம்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்...