×

முதுகுளத்தூர்- அபிராமம் சாலை வேகத்தடையில் எச்சரிக்கை குறியீடு அமைக்க வேண்டும்

சாயல்குடி, மே 23: முதுகுளத்தூரில் இருந்து அபிராமம் செல்லும் சாலையில் இச்சாலையில் எச்சரிக்கை குறியீடு இல்லாத வேகத்தடையினால் அவ்வழியாக வரும் அதிவேக வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இச்சாலையில் செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குளாகி உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடையில் எச்சரிக்கை வண்ணம் தீட்டி ஒளிரும் பொருட்கள் பதிக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post முதுகுளத்தூர்- அபிராமம் சாலை வேகத்தடையில் எச்சரிக்கை குறியீடு அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Mudugulathur-Abhiramam ,Sayalgudi ,Mudukulathur ,Abhiramam ,Dinakaran ,
× RELATED கடலாடியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு: சீரமைக்க கோரிக்கை