×

நாகமலை புதுக்கோட்டை அருகே நூற்றாண்டு புளியமரம் சாய்ந்தது

திருப்பரங்குன்றம், மே 23: திருப்பரங்குன்றம் அருகே பல நூற்றாண்டுகள் கடந்த புளிய மரம் வேருடன் சாய்ந்தது. மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள புதுக்குளம் கிராம மந்தையில் கோயில் அருகே பல நூற்றாண்டுகள் கடந்த புளியமரம் இருந்தது. இந்த கிரம மக்கள் இங்குள்ள கோயில் பெயரில் இந்த மரத்தை சப்பாணி மரம் என அழைத்து வந்தனர். மேலும், இந்த மரத்தை கிராம மக்கள் காவல் தெய்வமாக வணங்கியதுடன், தங்களது வீட்டில் நடைபெறும் விசேஷ நிகழ்ச்சிகளை இந்த மரத்தினை வழிபட்டு துவக்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்த மரம் நேற்று மாலை பெய்த மழை மற்றும் சூறைக்காற்றால் வேரோடு சாய்ந்தது. அப்போது அந்த இடத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் போனது. தெய்வமாக வழிபடப்பட்ட மரம் வேரோடு சாய்ந்தது இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post நாகமலை புதுக்கோட்டை அருகே நூற்றாண்டு புளியமரம் சாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Centenary ,Nagamalai Pudukottai ,Tiruparangunram ,Pudukkulam Village ,Madurai Pudukottai ,Pudukottai ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை சாதனை: அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்