×

கிணற்றில் தொழிலாளி மர்மச்சாவு

திருப்பரங்குன்றம், மே 23: மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள கீழக்குயில்குடி ஆதிசிவன் நகரை சேர்ந்தவர் சதிஷ்குமார்(41) இவர் சம்பவத்தன்று தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் அவரது உடல் மிதப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் கிணற்றில் இருந்து அவர்கள் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது மர்மச்சாவு குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post கிணற்றில் தொழிலாளி மர்மச்சாவு appeared first on Dinakaran.

Tags : Thiruparangunram ,Satish Kumar ,Kizhakuilgudi Adisivan ,Nagamalai Pudukottai ,Madurai ,
× RELATED மரம் சாய்ந்து வீடு சேதம்