×

மரம் சாய்ந்து வீடு சேதம்

நிலக்கோட்டை, ஜூன் 6: ஆத்தூர் அருகே அக்கரைப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). டிரைவர். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் இவரது தந்தை ஆறுமுகம் (65), மனைவி பவித்ரா (27), குழந்தைகள் ஹரிஷ் (8), விஷ்ணு (5) ஆகிய 4 பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவில் இந்தப் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் வீட்டின் அருகில் இருந்த வேப்பமரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதனால் அலறி அடித்துக்கொண்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் வருவாய்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மரம் சாய்ந்து வீடு சேதம் appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Satish Kumar ,Akkaraipatti East Street ,Attur ,Arumugam ,Pavitra ,Harish ,Vishnu ,
× RELATED ஓடை பாதையை மீட்க கோரி மறியல்