×

மரகத தண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாக உற்சவம்

மதுராந்தகம், மே23: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த பெருங்கரணை கிராமத்தில், நடு பழனி என்று அழைக்கப்படும் மரகத தண்டாயுதபாணி சாமி கோயில் மலை குன்றின் மீது உள்ளது. இக்கோயிலில், வைகாசி விசாக தினமான நேற்று, வைகாசி விசாக உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவானது, காலை மங்கல இசை முழங்க நிகழ்ச்சி தொடங்கியது. காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, மூல மந்திர யாக பூஜை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து 8 மணி யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட, புனித நீரினை ஊற்றி, மரகத தண்டாயுதபாணிக்கு கலச அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவித்து, ராஜா அலங்காரம் செய்து, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள், மலை குன்றின் படிக்கட்டுகள் வழியாக ஏறி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பட்டினை விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post மரகத தண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாக உற்சவம் appeared first on Dinakaran.

Tags : Vaikasi Visakha Utsavam ,Maragata Thandayuthapani Temple ,Madhurantagam ,Perungaranai ,Chittamur, Chengalpattu District ,Maragata Thandayuthapani Sami ,Nadu Palani ,Vaikasi Visakha Day ,Emerald Thandayuthapani Temple ,
× RELATED படாளம் அருகே கார்மீது லாரி மோதி சென்னையை சேர்ந்த 2 பேர் பலி: 5 பேர் படுகாயம்