×

ஓசூரில் லாரி மோதி தொழிலாளி பலி

ஓசூர், மே 23: திருப்பத்தூர் மாவட்டம், மாடப்பள்ளி அருகே உள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராமன்(56). இவர் ஓசூருக்கு கடந்த 19ம் தேதி, கூலி வேலைக்கு வந்தார். நேற்று முன்தினம், ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் தர்கா முத்துமாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரி, அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓசூரில் லாரி மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Hosur ,Pudukottai ,Madapalli ,Tirupattur district ,Dargah Muthumariamman Temple ,Hosur National Highway ,Dinakaran ,
× RELATED ஓசூர் அருகே குடிநீர் குடித்த 25 பேருக்கு வாந்தி, மயக்கம்..!!