×

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

ஏர்வாடி, மே 23: ஏர்வாடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2004ம் வருடம் அடிதடி வழக்கில் ஈடுபட்ட செண்பகராமநல்லூர் மருத்துவமனை தெருவைச் சேர்ந்த முருகன் (45) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் முருகன் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 6 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து முருகனை ஏர்வாடி போலீசார் தேடிவந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

The post நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Airwadi ,Murugan ,Chenpakaramanallur Hospital Street ,Airwadi Police Station ,
× RELATED ஏர்வாடி, வாலிநோக்கம் பகுதிகளில்...