×

ஈரான் அதிபர் ரைசியின் உடல் இன்று அடக்கம்

துபாய்: ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் உடலுக்கு மத வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இன்று அவரது சொந்த ஊரில் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹுசேன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்டோர் கடந்த 19ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகினர். அதிபர் ரைசி உள்ளிட்டோரின் உடல்கள் தப்ரிஸ் நகரில் இறுதி ஊர்வலத்துடன் தலைநகர் டெஹ்ரானுக்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து, டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி தலைமையில் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன.

ரைசி உள்ளிட்டோரின் உடல்கள் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் மீது ஈரான் தேசிய கொடி போர்த்தப்பட்டிருந்தது. மத வழக்கப்படி குரான் புனித நூல் ஓதப்பட்டு இறுதிசடங்குகள் செய்து வைக்கப்பட்டன. அப்போது, இடைக்கால அதிபர் முகமது முக்பர் கண்ணீர் விட்டு அழுதார். இந்நிகழ்வில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா துணைத் தலைவர் நயிம் கஸ்சேம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரதிநிதிகள் ரைசி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர். அஞ்சலிக்கு பின் இன்று ரைசியின் உடல் அவரது சொந்த ஊரான மஸ்ஸாத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

The post ஈரான் அதிபர் ரைசியின் உடல் இன்று அடக்கம் appeared first on Dinakaran.

Tags : President Raisi ,Dubai ,President ,Ibrahim Raisi ,President Ibrahim Raisi ,Foreign Minister ,Hussain Amiraptullahian ,Raisi ,
× RELATED துபாய் நாட்டில் மண்ணிட்டு மூடிய...