×

மேலாண்மை ஆணையத்தை கண்டித்து திருவாரூரில் காவிரி விவசாயிகள் சங்கம் நகல் எரிப்பு போராட்டம்

 

திருவாரூர், மே 22: மேகதாது அணைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து திருவாரூரில் காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேகதாது அணைக்கு ஆதாரவாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்தும், சட்டவிரோதமாகவும், உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அதனை உடனடியாக திரும்ப பெற கோரி திருவாரூரில் நேற்று பழைய பேருந்து நிலையம் முன்பாக பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  மாநில துணை தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொறுப்பாளர்கள் குருசாமி, முகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மேலாண்மை ஆணையத்தை கண்டித்து திருவாரூரில் காவிரி விவசாயிகள் சங்கம் நகல் எரிப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Cauvery Farmers' Association ,Thiruvarur ,Management Authority ,Tiruvarur ,Cauvery Management Authority ,Meghadatu Dam ,Cauvery Farmers Association ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் சட்ட நகல் எரிப்பு