×

தஞ்சாவூர் கரந்தைகருணாசாமி கோயிலில் வைகாசி விசாகப்பெருவிழா தேரோட்டம்

 

தஞ்சாவூர், மே22: தஞ்சாவூர் கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோயில்என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வசிஷ்டர் பூஜை செய்து வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் கோயில் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோயில்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது.இங்குள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர் என்றும், கருணாசாமி என்றும், இறைவி பெரியநாயகி அம்மன் என்றும், திருபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 9ம் தேதி அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. வசிஷ்டேஸ்வரர்,பெரியநாயகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பக்தர்கள் கோலாட்டம் ஆடியபடி தேரோட்டம் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

The post தஞ்சாவூர் கரந்தைகருணாசாமி கோயிலில் வைகாசி விசாகப்பெருவிழா தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Vaikasi ,Visakhaperuvizha ,Thanjavur Karantha ,Karunaswamy ,Temple ,Thanjavur ,Vasishteswarar ,Thanjavur Karanthai ,Vasishtar ,Tamil Nadu ,Department of Hindu Religious Charities ,Vaikasi Visakhaperuvizam ,Thanjavur Karanthikarunasamy Temple ,
× RELATED வைகாசி விசாகத்தை முன்னிட்டு...