×

தஞ்சாவூரில் ராஜிவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

 

தஞ்சாவூர், மே22: முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தியின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு ராஜிவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அன்பரசன் தலைமை வகித்தார். மூத்த காங்கிரஸ் தலைவர் சித்திரகுடி ஆண்டவர் ராஜிவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் பூதலூர் மோகன்ராஜ், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு, வட்டாரத் தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட மகளிர் பிரிவு செயலாளர் சசிகலா, சோழ மண்டல சிவாஜி பாசறை தலைவர் சதா வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அம்பலராஜ், முருகன், மாணவர் காங்கிரஸ் கேசவ மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

The post தஞ்சாவூரில் ராஜிவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Memorial Day ,Thanjavur ,Rajiv Gandhi ,Thanjavur South District Congress ,Thanjavur Melayvedi District Congress ,Dinakaran ,
× RELATED ராஜீவ்காந்தி நினைவு தினம்