×

பாடாலூர் செல்லியம்மன் கோயிலில் முள் படுகளம் நிகழ்ச்சி

 

பாடாலூர், மே 22: பாடாலூர் கிராமத்தில் மாரியம்மன், அய்யனார்,செல்லியம்மன் ஆலய தீமிதி, படுகளம், திருத்தேர் திருவிழா கடந்த ஏப்.28 அன்று பூச்சொரிதலுடன் தொடங்கியது. நேற்று இரவு 10 மணியளவில் முள்படுகளம் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக கருவேல முட்கள் வெட்டி வந்து சுமார் 100 மீட்டர் நீளம் 5 அடி உயரத்தில் கடை வீதியில் இருபுறமும் முள்படுகளம் அமைக்கப்பட்டது.

பின்னர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முள்ளின் மீது பக்தர்கள் படுத்து வேண்டுதலை நிறைவேற்றினா். தொடர்ந்து பல்லக்கில் செல்லியம்மனும், குதிரை வாகனத்தில் அய்யனார் சுவாமியும், ஓலை பிடாரி சுவாமி வீதி உலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.நாளை மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

The post பாடாலூர் செல்லியம்மன் கோயிலில் முள் படுகளம் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Padalur Chelliyamman ,Padalur ,Mariamman ,Ayyanar ,Chelliyamman ,Thimiti ,Padukalam ,Thiruther ,Padalur village ,Mulpadukalam ,Padalur Chelliyamman temple ,
× RELATED பாடாலூர் அருகே பைக்கில் இருந்து விழுந்து செவிலியர் பலி