×

அரியலூரில் ராஜிவ்காந்தி 33வது நினைவு நாள் அனுசரிப்பு

 

அரியலூர், மே 22:அரியலூர் காமராஜர் சிலை முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 33வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் ராஜிவ் காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து ராஜிவ் காந்தியின் நினைவு நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் மே 21ம் தேதி தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அமைதி, மனிதநேயம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தினை பொதுமக்களிடையே எடுத்துக் கூறும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், நகரத் தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட மாவட்ட, வட்டார, நகர, நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post அரியலூரில் ராஜிவ்காந்தி 33வது நினைவு நாள் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi ,Ariyalur Ariyalur ,District Congress Party ,Ariyalur Kamaraj Statue ,Congress party ,Shankar ,Ariyalur ,
× RELATED 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை...