×

நாகப்பட்டினத்தில் புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்

 

நாகப்பட்டினம்,மே22: நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் சாலையில் புதுச்சேரி மாநில மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுபானம் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி(46) கைது செய்தனர். அவரிடம் இருந்து 750 மில்லி லிட்டர் அளவு கொண்ட 50 புதுச்சேரி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்தனர்.

The post நாகப்பட்டினத்தில் புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : NAGAPATTAN ,Nagapattinam ,Puducherry ,Nagappatnam Public Office Road ,Karaikal ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் நகராட்சி குப்ைப...