×

காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம்

காளையார்கோவில், மே 22: காளையார்கோவிலில் சொர்ண காளீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத்தையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் ேகாயிலில் மே 13ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிசேகம் தீப ஆராதனையுடன் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் வேத மந்திரங்கள் முழங்க விஷேச அபிஷேகமும், தீப ஆராதனையும் நடைபெற்றது.

தினமும் ஒவ்வொரு வாகனங்களில் திருவீதி உலாவாக வந்து காட்சியளித்து அருள்பாளித்தார். 9ம் திருவிழாவான நேற்று காலையில் சவுந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சோமேஸ்வரர் சுவாமிக்கு விஷேச அபிஷேகமும் தீபஆராதனையும் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சோமேஸவரர், சவுந்தரநாயகி அம்பாள் 2 தேர்களில் காட்சியளித்து வீதி உலா நடைபெற்றது.

இதில் சவுந்தரநாயகி அம்மன் தேரை பெண்கள் மட்டும் இழுத்து வந்தனர். ஏற்பாடுகளை காளையார்கோவில் கண்காணிப்பாளர் பாலசரவணன், ஸ்தானிகம் சிவஸ்ரீ.காளீஸ்வரக் குருக்கள், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மேலாளர் இளங்கோ செய்திருந்தனர். விழாவில் பக்தர்களுக்கு குளிர்பானங்கள், அன்னதானம் வழங்கபட்டது. தொடர்ந்து இன்று (மே 22) மாலை தெப்பத்திருவிழா நடைபெறும்.

The post காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Vaikasi ,Therotam ,Kolagalam ,Sorna Kaliswarar Temple ,Kalaiyarko ,Kalaiyarkovil ,Vaikasi Visakha ,Golden Kaliswarar Temple ,Kalayarkoil Golden Kaliswarar Temple ,
× RELATED பாடாலூரில் செல்லியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்