×

ராஜீவ் நினைவுதினம் அனுசரிப்பு

 

சிவகங்கை, மே 22: சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. நகர் காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

பொதுக்குழு உறுப்பினர் சோணை, வட்டாரத் தலைவர்கள் மதியழகன், உடையார் நிர்வாகிகள் சிதம்பரம், வெள்ளைச்சாமி, மோகன்ராஜ், சண்முகராஜன், மாநில மகளிரணி துணைத் தலைவி ஸ்ரீவித்யாகணபதி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சையது இப்ராகிம், ஒன்றிய கவுன்சிலர் இளங்கோவன், நகர்மன்ற கவுன்சிலர் மகேஸ்குமார், தமிழரசன், பழனிச்சாமி, பூக்கடை பாண்டியன், லட்சுமணன் பலர் கலந்து கொண்டனர்.

The post ராஜீவ் நினைவுதினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Rajiv Memorial Day ,Sivagangai ,Congress party ,Rajiv Gandhi ,Anti-Terrorism Day ,Nagar Congress ,President ,Dinakaran ,
× RELATED திருவாரூர் வலங்கைமானில் ராஜிவ்...