×

விதை உற்பத்தி திடலில் கண்காணிப்பு குழு ஆய்வு

 

ஈரோடு, மே 22: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வீரிய ஒட்டு மக்காசோளம் கோ.எச். (எம்) 8, கோ.எச் (எம்) 11 ஆகிய ரகங்களின் வல்லுனர் நிலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டு விதை பயிர்கள் முதிர்ச்சி மற்றும் பூப்பருவத்தில் உள்ளது. நெற்பயிரில் சி.ஆர் 1009 சப்1 மற்றும் உளுந்து பயிரில் வி.பி.8 ஆகிய ரகங்களில் விதை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விதை பண்ணையை பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல், உதவி பேராசிரியர்கள் வினோதனா, ஆனந்தி, உத்தராசு, அமுதா, ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம், பவானிசாகர் விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி ஆகியோர் அடங்கிய வல்லுனர் விதை உற்பத்தி கண்காணிப்பு குழு, ஆய்வு செய்தது.

விதை பயிர் நடவு முறை, விதை பயிரில் பிற ரக கலவன்கள், பயிர் விலகு தூரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் உள்ளதா என ஆய்வு செய்தனர். அப்போது, தரமான வல்லுனர் விதைகளை உற்பத்தி செய்திட, தேவையான அனைத்து நடைமுறைகளையும் கடைபிடிக்க களப்பணியாளர்களை அறிவுறுத்தினர்.

The post விதை உற்பத்தி திடலில் கண்காணிப்பு குழு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Erode ,Viriya Otu Maize Co.H. ,Bhavanisagar Agricultural Research Station ,Erode District ,
× RELATED போலி உரம், பூச்சிக்கொல்லி மருந்து...