×

டூவீலர் மோதி முதியவர் பலி

திருமங்கலம், மே 22: கள்ளிக்குடியில் நான்குவழிச்சாலையில் நடந்து சென்றவர் டூவிலர் மோதிய விபத்தில் உயிரிழந்தார். கள்ளிக்குடி அருகேயுள்ள அக்கதாபட்டி எம்ஜிஆர் காலனியை சேர்ந்தவர் பால்பாண்டி (56). நேற்று முன்தினம் இரவு இவர் கள்ளிக்குடி மதுரை நான்குவழிச்சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்தவழியாக டூவீலரில் வந்த விருதுநகரை சேர்ந்த ராஜ்குமார் ஓட்டி வந்த டூவீலர் பால்பாண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பால்பாண்டி, ராஜ்குமார் இரண்டு பேரும் காயமடைந்தனர். தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் இருவரையும் மீட்டு விருதுநகர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பால்பாண்டி உயிரிழந்தார். ராஜ்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

The post டூவீலர் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Kallikudi ,Balpandi ,Akkadapatti MGR Colony ,Kallikkudi Madurai ,
× RELATED திருமங்கலம் அருகே தடுப்புச்சுவரில் மோதி லாரி விபத்து