×

தூத்துக்குடியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி, மே 22: தூத்துக்குடி மீ.கா.தெரு பகுதியில் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் புதிய பேவர் பிளாக் சாலைகள், தார் சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள், மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சில இடங்களில் பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாநகராட்சி 38வது வார்டுக்குட்பட்ட மீ.கா.தெரு பகுதியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களை சந்தித்து குறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவரிடம் தங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாயை சீரமைத்துத் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து விரைவில் இந்த பணிகள் முடித்துத் தரப்படும் என அமைச்சர் கீதாஜீவன் உறுதியளித்தார். அப்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி துணை பொறியாளர் சரவணன், வட்ட செயலாளர் கங்காராஜேஷ், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, அல்பர்ட் பிரதீப் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர் கீதாஜீவன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Geethajeevan ,Thoothukudi ,M.K. Theru ,
× RELATED மீளவிட்டான் சாலை விரிவாக்கப் பணி