×

சாதனை மாணவிகளுக்கு பாராட்டு விழா

நெல்லை, மே 22: வடக்கு விஜயநாராயணம் கிளை நூலகத்தில் நூலக மனோ வாசகர் வட்டக்கூட்டம் தலைவர் கார்த்திக் தலைமையில் நடந்தது. உறுப்பினர் சுடலைக்கண் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் விஜயநாராயணம் அரசு உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த மாணவி முத்துலெட்சுமி, 477 மதிப்பெண்கள் பெற்று 2வது இடம் பிடித்த மாணவி ஆர்த்தி, 461 மதிப்பெண்கள் பெற்று 3வது இடம் பிடித்த மாணவி சிவ செல்வ வைஷ்ணவி ஆகியோருக்கு வாசகர் வட்டம் சார்பில் உறுப்பினரும், ஆசிரியருமான முத்துசெல்வி பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் ராஜப்பா, ராகுல், சம்மனசுபாண்டியன் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர். நூலகர் டேவிட் நன்றி கூறினார்.

The post சாதனை மாணவிகளுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Nellai ,North Vijayanarayan ,President ,Karthik ,Sudalaikan ,Vijayanarayan Government High School ,Dinakaran ,
× RELATED நெல்லை காங். தலைவர் மரண வாக்குமூலம்...