×

தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு

தர்மபுரி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக தர்மபுரி எம்எல்ஏ அலுவலகத்தை வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை, அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள், சட்டமன்ற அலுவலக உள்புற கேட் திறந்து இருந்ததை பார்த்தனர்.

உடனடியாக எம்எல்ஏ வெங்கடேஸ்வரனுக்கும், காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் பூட்டை உடைத்திருப்பது தெரியவந்தது. திருட்டு எதுவும் போகவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

The post தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri MLA ,Dharmapuri ,
× RELATED 2 குழந்தைகளுடன் இளம்பெண் மர்ம சாவு விஷம் குடித்த கணவனும் உயிரிழப்பு