×

5 கட்ட தேர்தலுக்கு பின் பாஜவுக்கு 310 தொகுதிகள் : அமித் ஷா நம்பிக்கை

சம்பல்பூர்: ஐந்து கட்ட மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில் பாஜ 310 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் பாஜ வேட்பாளரை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் அமித் ஷா, இந்த முறை பாஜவின் சின்னமான தாமரையானது ஒடிசாவில் மலரும்.

5கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் பாஜ 310 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. 6 மற்றும் 7 கட்ட தேர்தல் முடிந்த பின் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜ கைப்பற்றும். ஒடிசாவின் பெருமை, மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிஜூ ஜனதா தளம் அரசு அவமதிக்கிறது. கனிம வளங்கள் இருந்தாலும் மாநிலத்தின் வளங்களை பாதுகாக்கும் முதல்வர் இல்லை. மாநிலத்தின் அனைத்து பகுதிகளின் சமமான வளர்ச்சிக்கு பாஜ உறுதி பூண்டுள்ளது என்றார்.

* ஒரு தமிழர் ஒடிசாவை ஆள நினைப்பதா?
ஒடிசாவில் பிரசாரம் ெசய்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறுகையில்,’பாஜவுக்கு வாக்களித்தால் ஆற்றல் மிக்க ஒடிசாவை மண்ணின் மகன் ஆட்சி செய்வார். ஆனால் முதல்வர் நவீன் ஒடிசாவில் அதிகாரிகள் ஆட்சி அமைக்க கட்டாயப்படுத்துகிறார். ஒடியா மக்களின் பெருமை மற்றும் கண்ணியத்தைத் தாக்குகிறார். அவர் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பெருமையை நசுக்குகிறார். மக்கள் பாஜவுக்கு வாக்களித்தால் மண்ணின் மைந்தன் ஆட்சி நடத்துவார். தமிழ்நாட்டின் அதிகாரி அல்ல’ என்றார்.

The post 5 கட்ட தேர்தலுக்கு பின் பாஜவுக்கு 310 தொகுதிகள் : அமித் ஷா நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,elections ,Amit Shah ,Sambalpur ,Union Home Minister ,-phase Lok Sabha elections ,Sambalpur, ,Odisha ,Union Home Affairs ,Dinakaran ,
× RELATED டெல்லியில் உள்ள பாஜக தலைமை...