×

பருப்பு ரசம்

தேவையானவை:

துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி,
தனியா – ¾ தேக்கரண்டி,
சீரகம் – ½ தேக்கரண்டி,
கறிவேப்பிலை சிறிதளவு,
தக்காளி – 2,
புளி – நெல்லிக்காய் அளவு,
பூண்டு பற்கள் தோலுடன் – 5,
தாளிக்க நெய்,
கடுகு,
பெருங்காயம்,
கறிவேப்பிலை சிறிது.
மல்லித்தழை ஒரு கைப்பிடி,
உப்பு – தேவையான அளவு,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

துவரம்பருப்பு, தனியா, சீரகம், காய்ந்த கறிவேப்பிலை இவைகளை பச்சையாக பொடிக்கவும். புளியை உப்புடன் கரைத்து வடிகட்டி, அதில் தக்காளி பிசைந்து விட்டு மஞ்சள் பொடி, இடித்த பொடியையும் போட்டு, பூண்டை தட்டிப் போட்டு விடவும். வாணலியில் நெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், பச்சை கறிவேப்பிலை, மிளகாய் கீறிப்போட்டு தாளித்து புளிநீர் கலவையை சட்டென கொட்டி மூடி ஒரு கொதி வந்ததும் இறக்கி மல்லித்தழை தூவி வேறு பாத்திரத்திற்கு மாற்றி சிறிது நீரூற்றி மூடி வைக்க மணக்க மணக்க ரசம் ரெடி.

The post பருப்பு ரசம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சாமை மிளகு பொங்கல்