×

பழைய சட்டக் கல்லூரி அருகே 5 மாடி கட்டடம் கட்ட தடையில்லை: நாளை அடிக்கல் நாட்டு விழா நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: பழைய சட்டக் கல்லூரி அருகே 5 மாடி கட்டடம் கட்ட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை அடிக்கல் நாட்டு விழா நடத்தவும் ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை பாரிமுனையில் உள்ள பழைய சட்ட கல்லூரி வளாகத்தில் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற அறைகள், நீதிபதிகள் அறைகள் உள்ளிட்டவை அடங்கிய 5 மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மோகன் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வி.ஆர். சாமிநாதன் மற்றும் வி.வி.பாலாஜி அடங்கிய அமர்வில் இன்று அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புராதனமான கட்டடமான இந்த பகுதியில் மாஸ்டர் பிளான் எதும் இல்லாமல் கட்டடங்கள் ஏதும் மேற்கொள்ளக்கூடாது, கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது எனவும் உயர்நீதிமன்ற வளாகத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து மாஸ்டர் பிளான் வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த பிளான் வகுக்கும் வரைக்கும் 5 மாடி கட்டிடத்தின் டிகள் விழாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பழைய சட்டக்கல்லூரியை இடிக்க போவது இல்லை என்றும் அதன் அருகில் இந்த 5 மாடி கட்டடம் அமைய உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் அடிகள் நாட்டு விழாவிற்கு எந்த அனுமதியும் பெற தேவையில்லை. அனுமதி பெறாமல் எந்த ஒரு செங்கலை கூட காட்டமுடியாது என்று தெரிவித்தார். மேலும் 5 மாடி கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் மோகன் அளித்த விண்ணப்பத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டிடக்குழு நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டது. அந்த குழு கூட்டத்தில் புதிய நிபுணர் குழுவை அமைத்து இது சம்பந்தமாக ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய குழுவின் அறிக்கை கிடைத்த பிறகே கட்டுமானப்பணிகள் தொடங்கப்படும் என்றும் அதற்கு முன்பு எந்த ஒரு கட்டுமான பணியும் துவங்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாக பிரிவு பதிவாளர் தரப்பில் ஆஜரான கூடுதல் குறுக்கீட்டாளர்கள் மத்திய, மாநில அரசுகள் தவிர வேறு எவரும் கட்டுமானங்கள் மேற்கொள்வதாக இருந்தால் தான் முன் அனுமதிகள் தேவை என்றும் தெரிவித்தார் அணைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் உயர்நீதிமன்ற கட்டட குழுவின் கூட்ட முடிவுகளை பதிவு செய்து கொண்டு அதனடிப்படையில் நாளை அடிக்கல் நாட்டுவிழாவை நடத்தலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதே சமயம் சட்ட கல்லூரி வளாகத்தில் இருந்த இரண்டு சமாதிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்றும் பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த அடிக்கல் நாட்டு விழாவை இந்து முறைப்படி மட்டுமல்லாமல் அனைத்து மத முறைப்படி நடத்த உத்தரவிட வேண்டும் என்று திராவிடம் கழகம் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் இது ஒரு மத நிகழ்வு என எப்படி அனுமானிக்க முடியும் என்ற கேள்வியை கேட்டு இத்தகைய முறையீட்டை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.

The post பழைய சட்டக் கல்லூரி அருகே 5 மாடி கட்டடம் கட்ட தடையில்லை: நாளை அடிக்கல் நாட்டு விழா நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,Chennai High Court ,Barimuni, Chennai ,Dinakaran ,
× RELATED கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது...