×

கோவை – மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலில் ஒழுகிய மழைநீர்: ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கோவை: கோவை – மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் மழைநீர் பெட்டிகளுக்குள் ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கோடைமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கரூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கோடைமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழைநீர் ரயில் பெட்டிகளுக்குள் கசிவதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கோவையிலிருந்து – மயிலாடுதுறைக்கு செல்ல கூடிய ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இத்தகைய அவதி ஏற்பட்டுள்ளது.

டி -14 கம்பாட்மென்ட் பயணிகள் இருக்கும் பொழுது கனமழை பெய்ததால் ரயிலில் மழைநீர் ஒழுகியுள்ளது. மழைநீர் கசிவு காரணமாக பயணிகள் தலையில் விழுந்துள்ளது. பயணிகள் மழைநீர் விழுவதை தடுப்பதற்கு டீ கப் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்தி தண்ணீரை பிடித்து வெளியேற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ரயிலை பொறுத்தவரை மேலே இரும்பு தகரத்தில் மூடப்பட்ட கம்பாட்மென்ட் ஆக உள்ளது. இதில் மழை நீர்க்கசிவு என்பது இல்லாத போதும் மழை பொழியும் நேரத்தில் அதனை தாங்கும் சக்தி ரயிலுக்கு உள்ளது.

ஆனால் அதனையும் கடந்து ரயிலின் மேற்கூரை வழியாக மழை நீர் கசிந்திருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இது போன்ற நிலை இனி வரக்கூடாது என்பதற்காக இந்த ரயிலை பழுது பார்க்க வேண்டும், மேற்க்கூரைகளை முறையாக சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய மழைக்காலங்களில் தொடர்ந்து முறையாக ரயிலை சீரமைத்து. பயணிகளின் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

 

The post கோவை – மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலில் ஒழுகிய மழைநீர்: ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Mayiladuthurai ,Tamil Nadu ,Erode ,Tirupur ,Salem ,Dharmapuri ,Karur ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...