×

அரசின் வேளாண் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

 

லால்குடி, மே 21: லால்குடி அருகே வேளாண்மை மூலம் அரசு தரும் திட்டங்கள் குறித்து விவசாய சங்க நிர்வாகிகளுக்கு விவசாய சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் விளக்கி கூறினார். லால்குடிஒ ன்றியம் மேலவாழை கிராமத்தில் விவசாய சங்க கூட்டம் நடைபெற்றது. லால்குடி நகர தலைவர் குணசீலன், துணைத் தலைவர் கருவரதன், ஒன்றிய துணைத் தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் புதிய சங்க நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

விவசாயிகளை சந்தித்து வேளாண்மை மூலம் அரசு தரும் திட்டங்கள் குறித்தும், வேளாண்மையில் கிடைக்கக்கூடிய மானியங்கள் அரசு குறித்தும், விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட திட்டங்கள் பற்றி விவசாயிகளிடம் பேசினார். மேல வாழை சங்க தலைவராக சேகரும், செயலாளராக அந்தோணி சாமி, பொருளாளராக மோகன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வாழ்த்தி பேசினார்.

The post அரசின் வேளாண் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Lalgudi ,Agriculture Union State ,President ,Viswanathan ,Melawadi ,Dinakaran ,
× RELATED லால்குடி அருகே நந்தியாற்று வெள்ளப்பெருக்கால் சாலை துண்டிப்பு!!