×

நெடுஞ்சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு

 

திருச்சி, மே 21: திருச்சி நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் கோட்டத்தில் நெடுஞ்சாலைப் பணிகளை தணிக்கை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். திருச்சி நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் கோட்டத்தில் முசிறி மற்றும் திருச்சி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பாலப்பணிகளை சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது திருச்சி நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் கோட்ட பொறியாளர் வடிவேல், சேலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் துரை, உதவி கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் உடன் இருந்தனர். பாலத்தின் அளவீடு மற்றும் உறுதித்தன்மையினை இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

The post நெடுஞ்சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Inspection Committee of Highway Works ,Trichy ,Trichy Highway NABARD ,Rural Roads Division ,Village Roads ,Division ,Bridge ,Musiri ,Trichy Sub- ,Highway Works Audit Committee Inspection ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் மதிப்பிலான இ- சிகரெட்கள் பறிமுதல்