×

தஞ்சாவூர் குருதயாள் சர்மா அருகே பைபாஸ் சாலை பாலத்தில் பெயர்ந்து கிடக்கும் இரும்பு கம்பிகள்

 

தஞ்சாவூர், மே 21:தஞ்சாவூர் குருதயாள் சர்மா அருகே உள்ள பைபாஸ் சாலை பாலத்தில் இரும்பு கம்பிகள் பெயர்ந்து உள்ளது. அவற்றை சரி செய்ய கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் குருதயாள் சர்மா அருகே உள்ள பைபாஸ் சாலை உள்ளது. அந்த வழியாக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.

அதேபோல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு பணிகளுக்கு செல்லும் ஊழியர்களும் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் அதிக அளவில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பைபாஸ் சாலையின் பாலத்தின் நடுப்பகுதியில் இரும்பு கம்பி பெயர்ந்து உள்ளது. இதனால் அந்த வழியை கடக்கும் பொழுது வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே அதனை சரி செய்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தஞ்சாவூர் குருதயாள் சர்மா அருகே பைபாஸ் சாலை பாலத்தில் பெயர்ந்து கிடக்கும் இரும்பு கம்பிகள் appeared first on Dinakaran.

Tags : Thanjavur Gurudayal Sharma ,Thanjavur ,Thanjavur Gurudayal Sharma… ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் ஆர்.ஆர். நகர் பகுதியில்...