×

விளைச்சல் குறைந்ததால் மாங்காய் விலை உயர்வு

ராஜபாளையம் மே 21: ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாங்காய் விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை உயர்ந்துள்ளது. ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரபலமான பஞ்சவர்ணம், சப்பட்டை, அல்போன்சா போன்ற மாங்காய்கள் ரகங்கள் விளைவிக்கப்படுகிறது. இந்த மாங்காய்கள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது பருவநிலை மாற்றத்தால் மாங்காய் விளைச்சல் குறைவாகவே இருந்து வருகிறது.

இதனால் இதற்கு முன் ஒரு கிலோ ரூ.20க்கு விற்கக்கூடிய மாங்காய்கள் தற்போது ரூ.60 வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. மாங்காய் விலை அதிகமாக உள்ளதால் உள்ளூரில் விற்பனை கடைகள் குறைவாக உள்ளது. விளைச்சல் குறைவாக இருப்பதால் மாங்காய்கள் அனைத்தும் வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. இதனால் ராஜபாளையம் பகுதியில் மாங்காய் வரத்து குறைவாக உள்ளது.

The post விளைச்சல் குறைந்ததால் மாங்காய் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Western Ghats ,Alphonsa ,
× RELATED கவியருவியில் தொடர் தடையால் வண்ணத்து...