×

போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் ராஜபாளையம்

 

ராஜபாளையம், மே 21: ராஜபாளையம் நகர் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் முக்கிய வணிக நகராக உள்ளது. கனரக வாகனங்கள் உள்பட தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் ஏராளமான சுற்றுலா வாகனங்களும் ராஜபாளையம் நகரை கடந்து செல்கின்றன. மேலும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் நகர் பகுதி வழியாக கேரள மாநிலத்துக்கு திருமங்கலத்திலிருந்து கொல்லத்திற்கு செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீவல்லிபுத்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லக்கூடிய அரசு பேருந்துகளும் வந்து செல்கின்றன. தற்போது அனைத்து வாகனங்களும் நகரின் வழியாக சென்று வரும் நிலை உள்ளது.

மேலும் ராஜபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இணைப்பு சாலைகள் அமைப்பதற்கு பல ஆண்டுகளாக பல்வேறு திட்டங்கள் அரசு தீட்டி அதற்கு ஒரு சிலர் ஒத்துழைப்பு தராததால் இணைப்புச் சாலைகள் அமைக்கும் திட்டம் தாமதமாகி வருகிறது. இதனால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் இணைப்புச் சாலைகள் அமைக்கும் திட்டத்தை விரைவு படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் ராஜபாளையம் appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Virudhunagar district ,
× RELATED ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் தேரோட்டம்..!!