×

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் மெகா சைஸ் பள்ளம்

திருவாடானை, மே 21: திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சி.கே.மங்கலம் மின்வாரிய அலுவலகம் அருகே மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சி.கே.மங்கலம் வழியாக செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. திருவாடானை அருகே சி.கே.மங்கலம் மின்வாரியம் அருகில் இந்த சாலையின் ஒரு பகுதியில் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்கு உள்ளாக வேண்டிய நிலை இருந்து வருகிறது. எதிரே கார், லாரி போன்ற வாகனங்கள் வரும்போது இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் இந்த சாலையில் ஓரமாக செல்லும்போது இந்த பள்ளத்தில் இறங்கி செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படுகிறது. எனவே பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன்பாக, இந்த சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் மெகா சைஸ் பள்ளம் appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,CK Mangalam Power Board ,Trichy-Rameswaram National Highway ,CK Mangalam ,
× RELATED திருவாடானை சிகே மங்கலத்தில் மெகா சைஸ் பள்ளம் சீரமைப்பு