×

ராமேஸ்வரத்தில் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை

 

ராமேஸ்வரம்,மே 21: ராமேஸ்வரத்தில் சி.என்.ஜி எரிவாயு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆட்டோக்களில் எரிவாயு நிரப்ப பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தீவில் ஆட்டோக்கள் அனைத்தும் டீசல் மற்றும் பெட்ரோல் எரிவாயு மூலம் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி ஆட்டோவை கேஸ் எரிவாயு மூலம் இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மூலம் ஆட்டோ உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனால் அதிகமான ஆட்டோக்கள் சி.என்.ஜி எரிவாயுக்கு மாற்றப்பட்டது. தற்போது ராமேஸ்வரத்தில் சிஎன்ஜி எரிவாயு மூலம் அதிக அளவு ஆட்டோக்கள் சுற்றுலா வாகனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் இதற்கு எரிவாயு நிரப்பும் நிலையங்கள் போதிய அளவு இல்லாததால் எரிவாயு கிடைக்கும் நிலையங்களில் ஆட்டோக்களுக்கு எரிவாயு நிரப்ப ஓட்டுநர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களும் எரிவாயு நிரப்புவதால் எரிவாயு நிலையம் வாகனங்கள் சூழ்ந்து திணறி வருகிறது.

இதனால் கேஸ் எரிவாயு விரைவில் தீர்ந்து விடுவதால் அருகிலுள்ள கேஸ் எரிவாயு நிரப்பும் நிலையத்திற்கு பல கிலோ மீட்டர் செல்ல வேண்டி உள்ளது. தற்போது அதிகரித்து வரும் சிஎன்ஜி எரிவாயு பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு மாவட்ட நிர்வாகம் கூடுதல் எரிவாயு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து, எரிவாயு தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளராக சி.ஆர் செந்தில்வேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post ராமேஸ்வரத்தில் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Rameswaram island ,
× RELATED மின் தடையை சீரமைக்க கோரிக்கை