×

ராமேஸ்வரத்தில் காத்திருப்பு போராட்டம்

 

ராமேஸ்வரம், மே 21: ராமேஸ்வரத்தில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களான அக்னி தீர்த்தக் கடற்கரை, கோயில் நான்கு ரத வீதி, தனுஷ்கோடி அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இடையூறு காரணமாக இதனை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த முயற்சியை கைவிடக் கோரி சி.ஐ.டி.யூ சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று முழு கடையடைப்பு நடத்தி ராமேஸ்வரம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் என்.பி செந்தில் தலைமை தாங்கினார். அதிகாரிகளின் பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாததால் மழையையும் பொருட்படுத்தாமல் தாலுகா அலுவலகம் முன்பு தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post ராமேஸ்வரத்தில் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Agni Tirthak Beach ,Temple Four Chariot Road ,
× RELATED இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட...