×

மதுரையில் வாலிபரை கொன்ற நண்பர் கைது

அவனியாபுரம், மே 21: மதுரையில் வாலிபரை கீழே தள்ளி விட்டு கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர். மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மணியரசன் (24). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 10 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளனர். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சபரிராஜன் (25). இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சபரிராஜன் வீட்டின் அருகேயுள்ள காலி இடத்தில் இருவரும் ரஞ்சித், அய்யாத்துரை ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது மணியரசனுக்கும், சபரிராஜனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சபரிராஜன், மணியரசுவை பிடித்து கீழே தள்ளினார். இதில் மணியரசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மணியரசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து சபரிராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுரையில் வாலிபரை கொன்ற நண்பர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai Avaniyapuram ,Madurai ,Maniarasan ,Madurai Villapuram Housing Board ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...