×

மதுரையில் அரசு பள்ளிகளில் பெற்றோரை இணைத்து வாட்ஸ்அப் குழு: செல்போன் எண் சரிபார்ப்பு பணிகள் தீவிரம்

 

மதுரை, மே 21: மதுரையில் கல்வி துறை சார்பில் அரசு பள்ளிகளில் பெற்றோரை இணைத்து வகுப்புகள் தோறும் வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்தும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி தகவல் பரிமாறி கொள்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள், பள்ளிக்கு வந்த பிறகு வகுப்பை கட் அடித்து விட்டு வெளியில் சென்று சுற்ற முடியாத அளவுவிற்கும் பள்ளி மற்றும் வகுப்பறை தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் பெற்றோரை இணைத்து வகுப்புகள்தோறும் வாட்ஸ்அப் குழுக்கள் வரும் கல்வியாண்டு முதல் ஏற்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் எமிஸ் இணையம் மூலம் தற்போது ஒவ்வொரு மாணவரது பெற்றோர் செல்போன் எண்ணும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிந்ததும், பெற்றோரை இணைத்து வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பரிமாறப்படும் தகவல் மாணவர்களை வழிநடத்துவதுடன் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

The post மதுரையில் அரசு பள்ளிகளில் பெற்றோரை இணைத்து வாட்ஸ்அப் குழு: செல்போன் எண் சரிபார்ப்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Madura ,Madurai ,Dinakaran ,
× RELATED மதுரையில் கழிவுநீரை மழைநீர் வடிகாலில் கலந்தவர் மீது வழக்கு..!!