×

விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் பயிற்சி

 

பழநி, மே 21: தேனி மாவட்டம், குள்ளபுரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் 4ம் ஆண்டு படிக்கும் மாணவிகள் பழநியில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தங்கியிருந்து பயிற்சி பெற்று வருகின்றனர். பழநி புறநகர், காரமடையில் நேற்று முன்தினம் விவசாயிகளுக்கு மாணவிகள் பயிற்சி அளித்தனர். விவசாயிகளிடம் நெற்பயிரை தாக்கும் பூச்சிகள், நோய்கள் ஆகியவற்றை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்து அவர்கள் செயல்முறை விளக்கமளித்தனர்.

வேப்பம் புண்ணாக்கை அடித்தூளாக பயன்படுத்துவது, வேப்ப எண்ணெய்யை இலைகளில் தெளித்து சாறு ஊறிஞ்சும் பூச்சுகளை கட்டுப்படுத்துவது, ஊமத்தம் இலைகள் மற்றும் தண்டுகளை வயலில் பரப்புவதன் மூலம் தண்டு துளைப்பானை விரட்டுவது உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தனர். வசம்பு தூளை காலை நேரத்தில் தூவி கதிர் நாவாய் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்தும் விரிவாக விளக்கினர். பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

The post விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Palani ,Kullapuram College of Agricultural Technology ,Theni ,Palani Suburban, ,Karamadai ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து