×

மழையால் வீட்டின் தூண் இடிந்து விழுந்து சிறுமி பலி குடியாத்தம் அருகே சோகம் விளையாடிக் கொண்டிருந்தபோது

குடியாத்தம், மே 21: குடியாத்தம் அருகே மழையால் வீட்டின் தூண் இடிந்து விழுந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் உத்திரக்குமார். இவர் தொன்னப்பாறையில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து, அங்குள்ள கோழி பண்ணையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ருத்ரா(10). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் லேசான மழை பெய்தது. இந்நிலையில் உத்திரக்குமார் தங்கி இருந்த வீட்டின் முன்பகுதியில் உள்ள தூண் வலுவிழந்திருந்துள்ளது. மழையால் ஈரப்பதத்துடன் இருந்த தூண் இடிந்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த ருத்ரா மீது விழுந்தது. இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு வந்த அவரது குடும்பத்தினர் சிறுமியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமைைனக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுமி வீட்டின் தூண் இடிந்து விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post மழையால் வீட்டின் தூண் இடிந்து விழுந்து சிறுமி பலி குடியாத்தம் அருகே சோகம் விளையாடிக் கொண்டிருந்தபோது appeared first on Dinakaran.

Tags : Bali Gudiatham ,Gudiatham ,Uttarakumar ,Alathur ,Kudiatham ,Vellore district ,Thonnaparai ,
× RELATED தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ரகளை...