×

பெண் வேடமிட்டு சொகுசு பைக்கில் வலம் வரும் வாலிபர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த வீடியோ வைரல் வேலூரில் கல்லூரி மாணவிகள் வந்து செல்லும் இடங்களில்

 

வேலூர், அக்.18: வேலூரில் கல்லூரி மாணவிகள் வந்து செல்லும் இடங்களில் பெண் வேடமிட்டு சொகுசு பைக்கில் வாலிபர் ஒருவர் வலம் வரும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது வைரலாகி வருகிறது. இன்றைய தலைமுறையினர் தங்களை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்த பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தாங்கள் பதிவு செய்யும் ரீல்ஸ் வீடியோக்கள் அதிகமாக லைக்குகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆபத்துகளை உணராமல் சாகசங்களை பதிவு செய்து வருகின்றனர். ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டாலும் அதையும் ஒரு வீடியோ பதிவிட்டு சமூக வலைதளங்களில் தாங்கள் யார்? என்று காட்ட வேண்டும் என்பதில் குறியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் வேலூர் நகரத்தில் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு வாலிபர் பெண் வேடமிட்டு சொகுசு பைக்கில் வலம் வரும் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.

அந்த வாலிபர் தன்னை இளம்பெண்ணை போன்று அலங்காரம் செய்து கொண்டு தலையில் பூ வைத்துக் கொண்டு சொகுசு பைக்கில் கல்லூரிகள் அமைந்திருக்கும் பகுதிகள், பழைய பஸ் நிலையம், முக்கிய வீதிகளில் அதிவேகமாக ஹெல்மெட் அணியாமல் செல்கிறார். மேலும் அவர் கல்லூரி முடிந்து செல்லும் மாணவிகளின் முன்னிலையில் வேகமாக செல்வது போன்றும், அதை அந்த கல்லூரி மாணவிகள் பைக்கில் செல்லும் அவரை வியப்பாக பார்ப்பது போன்றும் வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் பெண்கள் அருகில் சென்று மோதுவது போன்று வேகமாக செல்வதும், சொகுசு பைக்கை முறுக்கி டயர் புழுதி பறக்க செல்வதும் போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். பெண்கள் நடந்து செல்லும் வீடியோவையும், நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை ஓரம் அதிவேகமாக பைக்கை ஓட்டிச் செல்லும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எனவே அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெண் வேடமிட்டு சொகுசு பைக்கில் வலம் வரும் வாலிபர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த வீடியோ வைரல் வேலூரில் கல்லூரி மாணவிகள் வந்து செல்லும் இடங்களில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Instagram ,
× RELATED வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை...