×

25 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது குடியாத்தம் ரயில் நிலையத்தில்

குடியாத்தம், மே 21: குடியாத்தம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக குடியாத்தம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், டிஎஸ்பி ரவிச்சந்திரன் உத்தரவின் படி குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் நேற்று ரயில்வே மேம்பாலம் அருகில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் படி நின்றுகொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த முகமத்(32), திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் அபிஷேக்(21) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களை சோதனை செய்ததில் 25 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இவர்கள் ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி செல்ல இருந்ததும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது? ரயில் மூலம் எங்கு கடத்தப்பட இருந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அபிஷேக் ஏற்கனவே கொலை வழக்கில் சிறைக்கு சென்று வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 25 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது குடியாத்தம் ரயில் நிலையத்தில் appeared first on Dinakaran.

Tags : Gudiatham railway station ,Gudiatham ,Gudiatham DSP ,DSP ,Ravichandran ,Kudiatham ,Parthasarathy ,Kudiatham railway station ,Dinakaran ,
× RELATED தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ரகளை...