×

கொலை முயற்சி வழக்கில் தொடர்பு குண்டாசில் மூவர் கைது

தூத்துக்குடி, மே 21: தூத்துக்குடி முத்தையாபுரம் பொட்டல்காடு சந்திப்பு பகுதியில் டீக்கடை உள்ளது. இக்கடையை நடத்திவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராமஜெயம் மகன் வேல்ராஜ் (45) மற்றும் முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த செந்தில்வேலனின் மகன் பிரேம்குமார் (19) ஆகிய இருவரையும் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்ய முயற்சி நடந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த முத்தையாபுரம் போலீசார், தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை, குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜெயக்குமாரின் மகன் ஹரிசிங் (23), முருகனின் மகன் சக்திவேல் (24), ஆறுமுகத்தின் மகன் ரமேஷ் ரேவிந்த் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைதான மூவர் 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார், தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் ஆகியோர் தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதிக்கு பரிந்துரைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அதன்பேரில் ஹரிசிங், சக்திவேல், ரமேஷ் ரேவிந்த் ஆகிய 3 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

The post கொலை முயற்சி வழக்கில் தொடர்பு குண்டாசில் மூவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Muttiahpuram Potalkadu ,Ramajayam ,Velraj ,Premkumar ,Senthilvelan ,Mullakkad ,Muthiyapuram ,
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது